அனைவருக்கும் வணக்கம். நான் வாஸ்து சாஸ்திரங்களில் மிகவும் நம்பிக்கை உடையவன். அதனால் என்னிடம் என் அண்ணன் மகன் 2 நாட்களுக்கு முன்பு வாஸ்துபடி வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும் என்று கேட்டான். அவனிடம் நான் வீட்டின் அளவை பொறுத்தே கதவுகள் இருக்க வேண்டும் என்றேன். மேலும் வீட்டின் தலைவாசலும், கொல்லைப்புற வாசலும் நேர் எதிராக இருக்க வேண்டுமென்றும், அது மட்டுமின்றி வீட்டில் ஜன்னல்கள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்றும், அதனால் விளையும் நன்மைகளை பற்றியும் விவரித்தேன். இப்போது அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

எத்தனை கதவுகள் வீட்டிற்கு இருக்க வேண்டும்?
வீட்டிற்கு எத்தனை கதவுகள் வைக்க வேண்டும் என்று கேட்டால் அது அந்த வீட்டின் அளவை பொறுத்துதான் உள்ளது. ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி சொல்லப்போனால் தலைவாசல் கதவும் கொல்லைப்புற கதவும் நேர் எதிராக இருக்க வேண்டும். அப்படி உங்களால் கதவை அமைக்க முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக தலைவாசல் கதவுக்கு நேர் எதிராக ஜன்னலாவது அமைக்க வேண்டும்.
தலைவாசல் கதவு பெரிய கதவாக இருக்க வேண்டும்.
தலைவாசல் கதவு வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
இந்த திசைகளை பார்த்து இருக்கும்போது சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டிற்குள் வருவதால் புத்துணர்ச்சியும் நல்ல எண்ணமும் உருவாகும்.
வீட்டுக்குள் இருக்கும் கதவுகள் முடிந்த அளவிற்கு நேர்மறையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நல்ல சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும்.
வீட்டில் உள்ள கதவுகள் சரியாகவும் சத்தம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
ஒருவேளை சத்தமோ, கதவு சரியில்லாமலோ இருந்தால் அது வீட்டின் நிம்மதியை கெடுக்கும்.
வாஸ்துபடி பார்த்தால் வீட்டின் ஜன்னல்கள் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் இருக்க வேண்டும்.
இந்த திசைகள் இயற்கையான வெளிச்சத்தையும் காற்றையும் வீட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நல்ல எண்ணம் உண்டாகும்.
இந்த தகவல் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
நோபுரோக்கர் மூலம் உங்கள் வீட்டை வமைப்பாளர்களை கொண்டு புதுப்பிக்கவும்.
Read More:
What is the best direction for study table according to vastu?
Your Feedback Matters! How was this Answer?
End to End Renovation Solutions for your Home
✔
High Quality Material✔
In House Team of Experts✔
On Time Completion✔
Dedicated Engineer & Project Team✔
Warrant✔
Cost Transparency
Living Room Renovation
GET FREE QUOTE

Bathroom Renovation
GET FREE QUOTE

Full Home Renovation
GET FREE QUOTE

Kitchen Renovation
GET FREE QUOTE

Tiling Work
GET FREE QUOTE

Fabrication Work
GET FREE QUOTE

Mason Work
GET FREE QUOTE

Extension
GET FREE QUOTE

Seepage Work
GET FREE QUOTE
Leave an answer
You must login or register to add a new answer .
வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும்?
Thala
59 Views
1
3 months
2025-02-28T09:53:00+00:00 2025-03-01T14:37:30+00:00Comment
Share