icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும்?

view 817 Views

2

1 Year

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-13T09:52:44+00:00

வீட்டில் கதவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு கண்டிப்பான விதி இல்லையென்றாலும், வாஸ்து சாஸ்திரம், ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்தவும், தோஷங்களைத் தவிர்க்கவும் சில முக்கிய வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. பொதுவாக, வீட்டில் மூன்று கதவுகள் இருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும் என்பதை பற்றி பின் வரும் தகவலில் விரிவாக நான் உங்களுக்கு கூறுகிறேன்.

வீட்டில் எத்தனை கதவுகள் இருக்க வேண்டும்?

முக்கிய கதவு தெற்கு அல்லது மேற்கு திசையில் இருந்தால், அதற்கு எதிர்புறமாக கிழக்கு அல்லது வடக்குத் திசையில் மற்றொரு கதவு இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

  1. சமச்சீரான அமைப்பு: வீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கதவுகள் இருந்தால், அது வாஸ்து தோஷங்களைத் தவிர்த்து நல்ல ஆற்றல் ஓட்டத்தை ஏற்படுத்தும்.

  2. இரட்டை கதவுகள்: வாஸ்து கொள்கைகளின்படி, வீட்டின் உள் ஆற்றல் சமநிலையை பேண இரட்டை கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது நல்லதாகும்.

  3. முக்கிய நுழைவாயில்: பிரதான கதவு வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்தால் அது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது; மேலும் அது இரட்டை கதவாக இருந்தால் அதுவும் மிகவும் ஆதரிக்கத்தக்கதாகும்.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோப்ரோக்கர் நிபுணர் வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டை புதிய தோற்றத்தில் மாற்றுங்கள்

0 2025-06-02T16:18:10+00:00

அனைவருக்கும் வணக்கம். நான் வாஸ்து சாஸ்திரங்களில் மிகவும் நம்பிக்கை உடையவன். அதனால் என்னிடம் என் அண்ணன் மகன் 2 நாட்களுக்கு முன்பு வாஸ்துபடி வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும் என்று கேட்டான். அவனிடம் நான் வீட்டின் அளவை பொறுத்தே கதவுகள் இருக்க வேண்டும் என்றேன். மேலும் வீட்டின் தலைவாசலும், கொல்லைப்புற வாசலும் நேர் எதிராக இருக்க வேண்டுமென்றும், அது மட்டுமின்றி வீட்டில் ஜன்னல்கள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்றும், அதனால் விளையும் நன்மைகளை பற்றியும் விவரித்தேன். இப்போது அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

எத்தனை கதவுகள் வீட்டிற்கு இருக்க வேண்டும்?

வீட்டிற்கு எத்தனை கதவுகள் வைக்க வேண்டும் என்று கேட்டால் அது அந்த வீட்டின் அளவை பொறுத்துதான் உள்ளது. ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி சொல்லப்போனால் தலைவாசல் கதவும் கொல்லைப்புற கதவும் நேர் எதிராக இருக்க வேண்டும். அப்படி உங்களால் கதவை அமைக்க முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக தலைவாசல் கதவுக்கு நேர் எதிராக ஜன்னலாவது அமைக்க வேண்டும்.

  1. தலைவாசல் கதவு பெரிய கதவாக இருக்க வேண்டும். 

  2. தலைவாசல் கதவு வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். 

  3. இந்த திசைகளை பார்த்து இருக்கும்போது சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டிற்குள் வருவதால் புத்துணர்ச்சியும் நல்ல எண்ணமும் உருவாகும்.

  4. வீட்டுக்குள் இருக்கும் கதவுகள் முடிந்த அளவிற்கு நேர்மறையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நல்ல சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும்.

  5. வீட்டில் உள்ள கதவுகள் சரியாகவும் சத்தம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

  6. ஒருவேளை சத்தமோ, கதவு சரியில்லாமலோ இருந்தால் அது வீட்டின் நிம்மதியை கெடுக்கும்.

  7. வாஸ்துபடி பார்த்தால் வீட்டின் ஜன்னல்கள் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் இருக்க வேண்டும்.

  8. இந்த திசைகள் இயற்கையான வெளிச்சத்தையும் காற்றையும் வீட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நல்ல எண்ணம் உண்டாகும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

நோபுரோக்கர் மூலம் உங்கள் வீட்டை வமைப்பாளர்களை கொண்டு புதுப்பிக்கவும்.

Read More:

What is the best direction for study table according to vastu?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners