ஒரு மாதத்திற்கு முன்பு என் மாமா எனக்கு தொழில் செய்வதற்காக அவரின் இடத்தை எனக்கு தந்தார். அப்போது நான் தொழில் தொடங்க பல அப்ரூவல் வாங்க சென்றேன். எனது டாக்குமெண்டை பார்த்த ஆஃபீஸர் இந்த இடம் கூட்டு பட்டாவில் உள்ளது என்று கூறினார். எனக்கு கூட்டு பட்டா என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே நான் அவரிடம் கேட்டேன். அவர் அப்படி என்றால் என்ன அதை எப்படி தனி பட்டாவாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறினார். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

கூட்டு பட்டா இருப்பது நல்லதா?
ஒரு இடத்திற்கு இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால் அது கூட்டு பட்டா என்று கூறுவர். உதாரணத்திற்கு, ஒருவர் 15 சென்ட் வைத்துள்ளார் அவர் 3 நபர்களுக்கு ஐந்து ஐந்து சென்டாக விற்கிறார். இதனால் அந்த மூன்று உரிமையாளர்களும் ஒரே சர்வே நம்பரில் கீழ் கூட்டு பட்டாவில் சேருகின்றனர். உங்கள் இடம் கூட்டு பட்டாவாக சேர்ந்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தாசில்தாரிடம் அப்ளை செய்து வாங்கலாம்.
கூட்டு பட்டாவால் நேரும் பிரச்சனைகள்
கூட்டு பட்டா பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும், முக்கியமாக குடும்பத்தில்.
இப்படிப்பட்ட குழப்பத்தை தவிர்க்க தனி பட்டா இருப்பதே நல்லது.
கூட்டு பட்டாவாக இருக்கும் இடத்தை தனி பட்டாவாக மாற்ற முடியும். ஆனால் அதற்கு நீண்ட நாள் எடுக்கும்.
எப்படி தனி பட்டா வாங்குவது
நீங்கள் மூலம் கூட்டு பட்டாவாக இருக்கும் இடத்தை தனி பட்டாவாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற இடங்களுக்கு நீங்கள் தனி பட்டா வாங்க வட்டாச்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அலுவலகம் சார்ந்து உங்கள் பட்டா கூட்டு பட்டாவாக இருந்தாலும் நீங்கள் வட்டாட்சியரிடம் கைப்பட எழுதிய கடிதத்தை குடுத்து அவரிடம் கேட்டுக்கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் பட்டா ஆவணங்களை நோபுரோக்கர் சட்டக் குழுவால் சரிபார்க்கவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Fast & Reliable Online Khata Transfer
✔
Dedicated Senior Advocates✔
Lowest Price✔
Fastest Process
Khata Package
Know More

Khata Transfer
Transfer Now

E-Aasthi Conversion
Transfer Now
Related Questions
Leave an answer
You must login or register to add a new answer .
கூட்டு பட்டா என்றால் என்ன?
Akila34
112 Views
1
5 months
2025-02-28T09:51:57+00:00 2025-02-28T10:26:27+00:00Comment
Share