icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வரி விதிப்பு எண் கண்டுபிடிப்பது எப்படி?

view 2247 Views

3

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-10-28T21:50:49+00:00

வரி விதிப்பு எண் கண்டுபிடிப்பது எப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் வருத்தம் கொள்ள வேண்டாம். நான் அதற்கான இரு வழிகளை உங்களுக்கு கூறுகிறேன் முதலில் நீங்கள் இதற்கு முன் நீங்கள் கட்டிய வரி விதிப்பு சலான், உங்கள் இட பத்திரம் ஆகியவற்றை வைத்து வரி விதிப்பு எண்ணை கண்டறியலாம். அதுமட்டுமின்றி முனிசிபல் அலுவலகத்தில் உங்கள் தகவல்களை கொடுத்து வரி விதிப்பு எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.

வரி விதிப்பு எண் கண்டறிவது எப்படி?

  1. முதலில் சென்னை மாநகராட்சி இணையதளத்திற்கு செல்லவேண்டும் .

  2. அதன் பிறகு Online Payment என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. அதில் Property Tax பகுதியை தேர்ந்தெடுக்கவும்.

  4. பின்பு சொத்து எண், பிரிவு எண் போன்ற தேவையான தகவல்களை கொடுக்கவும்.

  5. இதன்பிறகு Pay Tax விருப்பத்தை தேர்வு செய்தால், உங்கள் வரி விவரங்களை காணலாம்.

இந்த முறையை எனக்கு தாலுக்கா அலுவலக அதிகாரி கற்றுக்கொடுத்தல்.

உங்கள் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதில் நோபுரோக்கர் சட்ட நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

0 2025-06-02T15:14:42+00:00

ஒருநாள் நான் வரி விதிப்பு எண் கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் அண்ணன் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, நீ இதற்கு முன்னாடி கட்டிய பில் எதாவது இருந்தால் அதை எடுத்து பார், அதில் இருக்கும் என்று கூறினான். மேலும் பல விதங்களில் வரி எண்ணை கண்டுபிடிப்பது எப்படி என்றும் சொல்லி கொடுத்தார். அதை நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.

இடத்தின் வரி விதிப்பின் எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் உங்கள் வரி விதிப்பு எண்ணை மறந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உள்ளது.

  1. நீங்கள் இதற்கு முன்னர் கட்டிய வரி சலானை எடுத்து பார்த்தால் அதில் உங்கள் வரி விதிப்பு எண் தெரிந்துவிடும்.

  2. இல்லைனெனில் நீங்கள் உங்கள் இடப்பத்திரத்தையோ, வீட்டு பத்திரத்தையோ எடுத்து பார்த்தால் அதிலும் உங்கள் வரி விதிப்பு எண்ணை கண்டுபிடிக்கலாம்.

  3. மேலும் உங்கள் மாநிலத்தின் முனிசிபல் வலைத்தளத்திற்கு சென்று அதில் உங்களின் விவரங்களை கொடுத்தால் அது உங்களுடைய வரி விதிப்பு எண்ணை தரும்.

  4. சொத்து பதிவுகளுக்கு உங்கள் மாவட்ட மதிப்பீட்டாளரின் இணையதளத்தில் தேடலாம்.

உங்கள் அனைத்து சொத்து ஆவணங்களையும் சரிபார்க்க நோபுரோக்கர் சட்டக் குழுவிடமிருந்து உதவி பெறுங்கள்

Read More:

How to Find Assessment Number for Property Tax Online

0 2025-05-15T08:24:58+00:00

நான் சமீபத்தில் ஒரு வேலையாக தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இருந்த அலுவலர் என்னிடம் சொத்து விவரங்களை சரி பார்க்க வீட்டின் வரி எண்ணை கேட்டார். எனக்கு அது ஞாபகம் இல்லை. அதனால் எனக்கு தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு அவர், இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் எதையும் பார்க்கலாம் என்று கூறி எனக்கு ஆன்லைனில் வரி விதிப்பு எண் கண்டுபிடிப்பது எப்படி என்று சொல்லி கொடுத்தார். அதனை உங்களுடன் இப்போது நான் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆன்லைன் மூலம் எப்படி வரி எண்ணை கண்டுபிடிப்பது? 

இதோ ஆன்லைன் மூலம் வரி எண்ணை கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

  1. முதலில் சென்னை கார்ப்பரேஷன் வலைதளத்திற்கு செல்லுங்கள்.

  2. பின்னர் ஒன்லைன் பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  3. அதில் ப்ராப்பர்ட்டி டேக்ஸ் அழுத்துக்கள்.

  4. இதன் பின்னர் சொன் எண், டிவிஷன் எண் என்று கேட்கும் விவரங்களை பதிவு செய்யுங்கள்.

  5. இதனை முடித்த பின் பே டேக்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  6. இதனை செய்த பின் உங்கள் வரி எண்ணை உங்களால் பார்க்க முடியும்.

  7. அந்த தாலுக்கா அலுவலக ஆஃபீஸர் இதனை எனக்கு கற்றுக்கொடுத்தார்.

அதன்படி நானும் வரி எண்ணை கண்டுபிடித்தேன். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் அனைத்து சொத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதில் நோபுரோக்கர் சட்டக் குழுவிடமிருந்து உதவி பெறுங்கள்.

Read More:

How to Find Assessment Number for Property Tax in Tamil Nadu?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners