வாஸ்து சாஸ்திரபடி, வீட்டின் வடமேற்கு (வாயு மூலை) பகுதியில் பூஜை அறை அமைப்பது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. காரணம், வடமேற்கு திசை காற்று திசையாகும். இது இயக்கம், மாற்றம், நிலைத்தன்மையின்மை போன்றவற்றைக் குறிக்கிறது. ஆனால், பூஜை அறை அமைக்க வேண்டிய இடம் நிலையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அதனால் வாஸ்து சாஸ்திரத்தில் பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசையில் பூஜை அறை அமைப்பது சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வாயு மூலையில் பூஜை அறை வைக்கலாமா வேண்டாமா என்று.
எந்த திசையில் பூஜை அறை வைக்கலாம்?
வடகிழக்கு: வாஸ்து சாஸ்திரத்தில் மிகப் புனிதமான பகுதியாக வடகிழக்கு திசை கருதப்படுகிறது. அதனால் பூஜை அறைக்கு இதுவே சிறந்த இடம்.
கிழக்கு திசை: கிழக்கு நோக்கி இருக்கும் பூஜை அறை வீட்டில் நல்ல ஆற்றல் மற்றும் ஆன்மீக ஒளியை வரவேற்கும் என்று நம்பப்படுகிறது.
தென்கிழக்கு: சமையலறையில் பூஜை இடம் அமைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், தென்கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி அமைப்பது ஏற்றதாக கருதப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாஸ்து சாஸ்திரங்களின் படி உங்கள் வீட்டை மாற்றி அமைக்க நோபுரோக்கர் ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
வாயு மூலையில் பூஜை அறை வைக்கலாமா?
Ramnath88
248 Views
1
5 months
2025-08-30T11:52:06+00:00 2025-09-01T09:38:24+00:00Comment
Share